எதிர்வரும் திங்களன்று மேல் மாகாணம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் – சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, November 14th, 2020

தனிமைப்படுத்தல் பகுதிகள் மற்றும் மேல் மாகாண பயண கட்டுப்பாடுகள் குறித்த இறுதி முடிவு கொரோனா தொற்றின் தற்போதைய சூழ் நிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முடிவு எடுக்கப்படும் என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் அதனை அடுத்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அறிவுறுத்தப்பட்டபடி சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: