எதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாணசபைத் தேர்தல் – கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம்!

Friday, July 20th, 2018

எதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாணசபை தேர்தலை நடத்தலாம் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றையதினம் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரியவருகின்றது.

இதன் பிரகாரம் தற்போது கலைக்கப்பட்டுள்ள மாகாணசபைகள் மற்றும் சில மாதங்களில் கலைக்கப்படவுள்ள மாகாணசபைகள் உள்ளடங்கலாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி அல்லது அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி குறித்த தேர்தலை நடத்தலாம் என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Related posts: