எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம்?

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை தனது பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை எதிர்வரும் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அனைத்து மாகாணங்களும் அந்தந்த ஆளுநர்களில் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் வகையில் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் திட்டமிட்டிடிருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடைமுறைக்கான சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டை பசுமை எரிசக்தி நாடாக மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!
வடக்கு - கிழக்கில் அடுத்து வரும் மாதங்களில் காத்திருக்கும் ஆபத்து!
இன்றும் நாளையும் மழையுடனான காலநிலை தொடரும் – வானிலை அவதான நிலையம்!
|
|