எதிர்வரும் சில வாரங்கள் நாட்டிற்கு மிகவும் சிரமமான காலம் – பிரதமர் ரணில் எச்சரிக்கை!

Monday, May 16th, 2022

எதிர்வரும் சில வாரங்கள், நாட்டிற்கு மிகவும் சிரமமான காலமாக அமையுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தொடர்பாக தாம் பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் இந்தக் கலந்துரையாடல் பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

இந்தியாவுடனான வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு மேலும் 3 மாதங்கள் செல்லும். அதன் பின்னர் நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே பொருளாதார பாதிப்பிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: