எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் விமான நிலையம் திறக்கப்பட வாய்ப்பு – இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, June 4th, 2020

கொரோனா தொற்றையடுத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் சுற்றுலாபயணிகளுக்காகத் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பல்கேவுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க. விமான நிலையம் திறப்பது தொடர்பில் தூதுவர் எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான நிலையத்தைச் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் – ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தைத் திறக்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: