எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் பிரதான  கழிவகற்றல் திட்டங்கள் அறிமுகம்!

Tuesday, July 25th, 2017

எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் பிரதான 3 கழிவகற்றல் திட்டங்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கழிவு திட்டங்கள் தொடர்பில் தற்போது பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், குறித்த திட்டங்களை மையப்படுத்தி மின்னுற்பத்தி மற்றும் எரிதிரவ உற்பத்தியினை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கொழும்பில் அண்மைக்காலமாக குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் பெருமளவானவை பசளை உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Related posts: