எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை அமுல்!

Sunday, April 1st, 2018

எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள அமெரிக்க ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை அமுலுக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் இதனூடாக பெரும் நன்மை அடைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு தற்போது இலங்கை ஏற்றுமதியாளர்கள் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி.எஸ்.பீ. வரிச்சலுகை ஆவணத்தில் கைச்சாத்திட்ட நிலையில், இலங்கை உட்பட 120 நாடுகள் இந்த சலுகையினை பெறவுள்ளன.

இதற்கமைய இந்த 120 நாடுகளும் சுமார் 5 ஆயிரம் பொருட்களை வரிச்சலுகையுடன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: