எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் 11 வரை சாதாரணதரப் பரீட்சைகள் இடம்பெறும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது..
இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சாதாரணதரப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் 11 வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே க.பொ.த. சாதாரண பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 27 வரை பரீட்சையை நடத்த முன்னர் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் நிலைமையையும் மாணவர்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டும் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடமாகாணப் பிரதம செயலரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் - மல்லாகம் மாவட்ட நீதவான் உத்தரவு
கிளிநொச்சியில் மீன்பிடி உற்பத்தி வீழ்ச்சி!
இன்று முன்னிரவு 8 மணிமுதல் மீண்டும் முழுமையாக முடக்கப்படுகின்றது இலங்கை!
|
|