எதிர்வரும் ஆண்டளவில் கிராம மற்றும் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறை வளர்ச்சி அடையும் – அமைச்சர் நாமல் நம்பிக்கை!

Friday, December 11th, 2020

எதிர்வரும் ஆண்டளவில் கிராம மற்றும் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறையில் வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துன், கிராம மட்டத்தில் புரமைக்கப்படும் விளையாட்டு மைதானங்களில் கிராம சேவகர் பிரிவு மட்டத்திலும் பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்திலும் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேலும் விளையாட்டு திறன் கொண்ட கிராம இளைஞர் யுவதிகளை தேசிய மட்டத்திலிருந்து சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வது இந்த வேலைத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: