எதிர்வரம் வாரத்தில் சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!

Sunday, August 29th, 2021

மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக 2003 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தற்காலத்திற்குப் பொருத்தமான வகையில் மறுசீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்வும் வாரத்தில் இருந்து மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: