எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காததால் விரைவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம் – விவசாயத் துறை எச்சரிக்கை!

பெரும் போகத்தில் எதிர்பார்த்த நெல் உற்பத்தியை மேற்கொள்ளாததின் காரணமாக கூடிய விரைவில் மாபெரும் அசிரித் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என விவசாயத் துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பெரும் போகத்தில் 8000ஹெக்டேயரில் நெல் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் தற்போது இந்த எண்ணிக்கை 2,90,000 குறைந்துள்ளமையே இந்த அரிசித் தட்டுப்பாட்டுக்கான காரணி எனவும் இந்த நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மகாவலி, பெரும் மற்றும் சிறு விசவசாய நீர்த்தேக்கங்கள் அத்துடன் மழை போன்றவற்றால் எதிர்பார்த்த விவசாய நீர், குறித்த காலத்தில் கிடைக்காமை 8000 ஹெக்டேயர் நெல் உற்பத்தி என்ற இலக்கை அடைய முடியாமல் போய்விட்டமை போன்றவையே இந்த பின்னடைவுக்குக் காரணம் எனவும் இந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் இந்த பின்னடைவு காரணமாக சுமார் 9கோடியே 90லட்சம் கிலோ நெல் உற்பத்தியை இலங்கை அடையாமல் போனதும் இந்தப் பின்னடைவுக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய காலநிலையில் மகாவலி, குளங்கள், நீர்த் தேக்க்கள், ஏரிகள் என்பவற்றில் நீர் மட்டம் ஆகக் குறைந்த நிலையிலேயே காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
Related posts:
|
|