எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ?

Sunday, December 16th, 2018

அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது மஹிந்த உட்பட குழுவினர் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாகவும் இது தொடர்பாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு மஹிந்தவின் பெயர் யோசனை செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் தீர்மானிக்கப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாடாளுமன்ற அமர்வு நாளை மறுதினம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நாட்டில் கடந்த 50 நாட்களாக இடம்பெற்றுவந்த அரசியல் குழப்பங்களுக்கு முன்னர்  எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: