எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மதகுருமார் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, November 29th, 2021

எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மத குருமார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சில எதிர்க் கட்சி அரசியல்வாதிகள் கிறிஸ்தவ திருச்சபையை பிழையாக வழிநடத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ மதகுருமார் எதிர்க்கட்சியினரின் தீய நோக்கங்களிற்கு பலியாகக் கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் தெரிவித் துள்ளார்.

அருட்தந்தை சிறில் காமினி சிஐடிக்கு அழைக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் சாதகமாக பயன்படுத்தியுள்ளதை அவதானித்துள்ளோம் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டுவதற்கு இதனைப் பயன்படுத்தியுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறில்காமினி வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காகவே சிஐடிக்கு அழைக்கப்பட்டார் அவர் பகிரங்க அறிக்கை களை வெளியிட்டார். இதனால் சிஐடியினர் அவரிட மிருந்து வாக்குமூலத்தை பெற விரும்பினார்கள் இது இயல்பானது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: