எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் தெரிவிக்க விரும்புகின்றோம்- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

Tuesday, October 12th, 2021

பேச்சுவார்த்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் அனைத்து உணவகங்களுக்கும் அரசாங்கத்தின் ஆதரவு தேவை எனவும் அச்சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும் தண்ணீர் அல்லது மின்சாரக் கட்டணம் போன்ற சலுகைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் அல்லது மாதாந்த கொடுப்பனவு வழங்க வேண்டும்.

சமையல் எரிவாயு விலை உயர்வால் உணவகங்கள் நேரடியாக பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

அத்துடன் கடந்த இரண்டு வருடங்களில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் எந்தச் சலுகையும் வழங்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: