எதிர்காலத்தில் சுதந்திரமான முடிவுகளை எடுப்பேன் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதைத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பிட்ட சில தலைவர்களின் கருத்துகள் தொடர்பில் தாம் ஏமாற்றமடைவதாகவும் தெரிவித்தார்.
அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும், இது போன்ற நபர்கள் நாட்டை ஆக்கிரமிப்பார்களா என யோசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பியமையால் இந்த மக்கள் போராட்டம் நியாயமானது.
எனினும், ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை என்பவற்றில் உள்ள வரலாற்று மற்றும் பெறுமதி மிக்க பொருட்கள் அழிக்கப்பட்டமை குறித்து அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
ஓர் ஓவியம் மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியானது எனவும், இதன் மூலம் ஐந்து இறக்குமதி எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த ஓவியங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மக்கள் போராட்டத்தின் உறுப்பினர்களை அவர் வலியுறுத்தினார்.
பிரதமரின் இல்லத்தில் ஏற்பட்ட அழிவு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் , பிரதமரின் நூலகத்தில் நாட்டில் வேறு எங்கும் காண முடியாத ஏராளமான புத்தகங்கள் மற்றும் ஓவியங்கள் நாசமடைந்துள்ளதாகத்வும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|