எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

நெல் விலை குறைவடைந்துள்ளமை தொடர்பில், அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுசெல்ல உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எப்பாவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று உரக் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அவசியமான அரிசியை விநியோகிக்கும் இயலுமை விவசாயிகளுக்கு ஏற்படும்.
எனவே, எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மருத்துவ சங்கம் போராடுவது யாருக்காக - அமைச்சர் ராஜித!
நாட்டை முடக்குவது மிகவும் இலகு: ஏற்படும் பாதிப்புக்கள் பாரதூரமானவை - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவி...
ரஷ்யா - உக்ரைன் யுத்தம் - நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!
|
|