எதியோப்பிய விமான விபத்தின் எதிரொலி – போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு அமெரிக்காவிலும் தடை!

Wednesday, March 13th, 2019

இந்தியா, சீனா, எதியோப்பியா, சவூதி அரேபியா, பிரித்தானியா, சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த 10ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் சுமார் 33 நாட்டவர்கள் அதாவது 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த ஒக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எதியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்தநிலையில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தனியார் வைத்தியசாலை சத்திரசிகிச்சைகளுக்கு நிர்ணயக் கட்டணம்!
யாழ் மாநகரசபை பெண் அதிகாரி நிதி மோசடி: மூடிமறைக்க மாநகரசபை அதிகாரிகள் முயற்சி!
பயணத்தின் போது குழந்தைகளுக்கு தலைக்கவசம் அவசியம்!
மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள்!
தேர்தல் பிற்போடப்பட்டால் பதவி விலகுவேன் : மகிந்த!