எதனோலின் இறக்குமதிக்கு உடனடி தடை – நிதியமைச்சு!

Thursday, January 2nd, 2020

மதுபான உற்பத்திக்கான எதனோலின் இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதம மந்திரி மகிந்த ராஜபக்சவின் பணிப்புரையின்பேரில் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் எதனோலை இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: