எண்ணெய் கலப்படம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி!

Saturday, May 8th, 2021

சமையல் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதை தடுக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி நுகர்வோர் விவகார அதிகார சபையின் தவிசாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் அதிகாரசபை சட்டத்தின் கீழ் நேற்றுமுதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானியில் சமையலுக்கு உகந்த தேங்காய் எண்ணெய்யை வேறு எந்த எண்ணெய் வகையுடனும் கலப்படம் செய்யாமல் மொத்தமாகவோ, சில்லறையாகவோ விற்பனை செய்யப்பட வேண்டும் என இறக்குமதியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள் உள்ளிட்ட எண்ணெய் விநியோகத்துடன் தொடர்புடையவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: