எட்டு வருடங்களில் இரட்டிப்பாக அதிகரித்த வாகனங்களின் எண்ணிக்கை – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா!

Wednesday, February 8th, 2017

கடந்த எட்டு வருடங்களில் இலங்கையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்படைந்துள்ளதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு 3.5 மில்லியன் வாகனங்களே பயன்படுதப்பட்டன. ஆனால் தற்போதைய புள்ளிவிபரங்களின்படி வாகனங்களின் தொகை 6.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு 3 இலட்சத்து 87 ஆயிரத்து 210 மோட்டார் வாகனங்களே இருந்தன. ஆனால் தற்போது 7 இலட்சத்து 21 ஆயிரம் மோட்டார் வாகனங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டின் பின்னராக காலப்பகுதியில் முச்சக்கர வண்டி 443,000ல் இருந்து 1.1 மில்லியன் ஆக அதிகரி்துள்ளது.

மோட்டார் வண்டி 1.8 மில்லியன்களிலிருந்து 3.7 மில்லியனாக அதிகரித்துள்ளது. பஸ்கள் 81,000ல் இருந்து 104,000 ஆக அதிகரித்துள்ளது. லொறிகள் 271,000ல் இருந்து 324,000 ஆக உயர்ந்துள்ளது.

பிரதான நகரங்களில் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

nimal_ci

Related posts: