எட்டு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் நான்கு நாட்களுக்கு விடுமுறை!

Monday, May 29th, 2017

சீரற்றகால நிலைகாரணமாக நாட்டின் எட்டு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் நான்கு நாட்களுக்குக ல்வியமைச்சினால் விடுமுறை அறிவிக்கப்பபட்டுள்ளது.

மழை,வெள்ளம்,மண்சரிவு போன்றஅனர்த்தம் காரணமாகவே கொழும்பு, கம்பஹா, காலி,மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய எட்டு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையான நான்குநாட்களும் இவ்விடுமுறை நடைமுறையிலிருக்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதனிடையே மறு அறிவித்தல் வரை அனர்த்தங்களின் நிமித்தம் பாதிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மற்றும் தங்கியுள்ளமக்களை சொந்த இடங்களுக்கு உடனடியாக திரும்பவேண்டா மென்று அனர்த்த முகாமைத்து வமத்தியநிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: