எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியிலும் எனது ஆதரவும் வழிகாட்டுதல்களும் கிடைக்கும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
Saturday, June 20th, 2020இன்றையதினம் தனது 71 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு தனது ஆதரவும் வழிகாட்டுதல்களும் தொடர்ந்தும் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தினை பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் பிறந்தினமான இன்று அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் உங்கள் வாழ்க்கையின் இன்னொரு வருடத்தினை நீங்கள் கொண்டாடும் இந்த தருணத்தில் இலங்கை குறித்து எமக்குள்ள கூட்டுநோக்கத்தினை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்களை நீங்கள் வழங்குவதற்கான ஞானம் வலிமை மற்றும் பொறுமை உங்களிற்கு கிடைக்கவேண்டும் என வாழ்த்துகின்றேன் என மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த பாதையில் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியிலும் எனது ஆதரவும் வழிகாட்டுதல்களும் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தினை வழங்கின்றேன் என பிரதமர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|