எச்சிலை வீதியில் துப்புவோருக்கு எதிராக கடுமையான சட்டம் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021

பொது இடங்களில் மற்றும் நெடுஞ்சாலைகளில் வெற்றிலை எச்சிலை துப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனா பரவல் மற்றும் எச்சிலை வீதியில் துப்புவது மூலமாக ஏற்படும் கடுமையான சுற்றுசூழல் சீர்கேடு காரணமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெற்றிலை எச்சிலை துப்புவோரைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: