எச்சரிக்கை! வருகின்றது ‘வர்தா’ புயல்!! – வளிமண்டல திணைக்களம்!

வங்காளவிரிகுடாவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதாகவும் அது வலுப்பெற்று இன்றும் 24 மணித்தியாலத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வுநிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வுநிலையத்தின் அதிகாரியை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
வங்காளவிரிகுடாவில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தினால் அடுத்த 2 தினங்களில் மழை பெய்யும் .விசாகப்பட்டினத்திற்கு அப்பால் 1060 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த நிலை ஏற்பட்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து நாளை காலை புயலாக மாறும் . இதற்கு வர்தா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு கிழக்கு திசையில் ஆந்திர மாநிலம் மற்றும் காக்கிநாடா இடையே நோக்கி நகர்வதுடன் எதிர்வரும் 12ம் திகதி கரையைக்கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுநிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆந்திரா கடற்பரப்பில் மீன்பிடிக்கசெல்லவேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வர்தா புயலையடுத்து ராமேஸ்வரம் மற்றும் கடலூர் துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|