எச்சரிக்கை: வன்னியில் மூவருக்கு பன்றிக் காய்ச்சல் !

Sunday, February 12th, 2017

வன்னியில் பன்றிக் காய்ச்சல் நோய் காணப்படுவதாகவும் இதுவரை மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனா் எனவும் கிளிநொச்சி சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டகச்சி சம்புக்குளம்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா மற்றும் மாங்குளம் பிரதேசத்தில் பெரியகுளம்  ஆகிய இடங்களைச் சேரந்த மூன்று சிறுவா்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது என சுகாதார பிாிவு அறிவித்துள்ளது.

எனவே பின்வரும் நோய் அறிகுறிகள் காணப்படும் நிலையில், உடனடியாக அரச வைத்தியசாலையை நாடி உரிய  பரிசோதனை மற்றும் சிகிசை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

வைரசுக் காய்ச்சல் என்பது  புதியநோய் அல்ல. காலத்துக் காலம் இவ்வாறான  இன்ப்ளுவன்சா வைரஸ் காய்ச்சல் பரவுவதுண்டு. பன்றிகளில் உருவான இன்புளுவன்சா வைரஸ் ஆனது 2009 ஆம் ஆண்டு மனிதனுக்கு பரவியிருந்தமை, மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டது.  சில வேளைகளில் தாக்குதிறன் கூடியவைரஸ் வகைகள் தொற்றும்போதுகடுமையான விளைவுகள் மனிதருக்கு ஏற்படும்.

இலங்கையில் தற்போது H1N1 என்ற வைரஸ் தாக்கத்தால் ஒருவகைகாய்ச்சல் நோய் பரவிக்கொண்டு இருக்கிறது.

இது கற்பிணித்தாய்மார், பிரசவத்தின் பின்னரான தாய்மார், இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மூட்டு வருத்தம்,சலரோக வருத்தம் உடையவர்கள்; ஆகியோரை தாக்கும் போது விளைவுகள் கடுமையாக இருக்கும்.

எனவே கர்ப்பகாலத்தில்  இவ்வகை நோய்கள் ஏற்படும் போது மிகக்கவனமாக இருக்கவேண்டும். கர்ப்பகாலத்தில் இவ்வகை நோய்கள் ஏற்படும் போது மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

உரிய சிகிச்சை இல்லையென்றால் இதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கலாம்.  இந்நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்து சரியான சிகிச்சையை வழங்கினால் உரிய  நேரத்தில் தேவையற்ற தாய் – சேய்  உயிரிழப்பை தடுக்கலாம்.

கற்பிணித் தாய்மாருக்கு இதய வருத்தம் ,முட்டு,சலரோகம் போன்ற நோய்கள் இருந்தால் இந்நோயின் தாக்கம் மிக அதிகம் இருக்கும்.

நோயின் அறிகுறிகளாக பின்வருவன காணப்படும் இடத்து  உடனடியாக அரச வைத்தியசாலையை நாடி உரிய சிகிசை பெற்றுக்கொள்ளுமாறும்  பொது மக்களை சுகாதார பிரிவினா் கேட்டுக்கொண்டுள்ளனா்

அதாவது

  • சளிக்காய்ச்சல், தடிமன், தொண்டைப் புண், மூக்குச்சளி, தலையிடி, உடல் நோ என்பன காணப்படுவதோடு,
  • நோயின் அபாய அறிகுறிகளாக  அதி கூடிய காய்ச்சல், மூச்சுவிடமுடியாமை, நெஞ்சுநோ, மறதிக்குணம், நெஞ்சுப்படபடப்பு, வலிப்பு, வயிற்றோட்டம் எனபனவும் காணப்படும்
  • குறிப்பாக கர்ப்பவதிகள், பொதுமக்கள் கூடும் இடங்களான கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பேரூந்து பயணங்கள், புகையிரதப் பயணங்கள், மற்றும்  இந்நோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தல் என்பவற்றை இந்நோய் பரவும் காலங்களில்  தவிர்ப்பதால் இந்நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • சாதாரண வைரசுக் காய்ச்சலிலிருந்து இந்த H1N1 வைரசுக் காய்ச்சலினை வேறு பிரித்து அறிவது கடினமாகும். தகுந்த ஆய்வு கூட மற்றும் நிபுணத்துவ சேவையும் விசேட வைத்திய நிபுணர்களது நேரடிக் கண்காணிப்புமே H1N1 வைரசுக் காய்ச்சலினை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு அவசியமாகும்.

swineflu

Related posts: