எச்சரிக்கை! – தொலைபேசி பயன்படுத்துபவர்களை இலக்கு வைத்து மோசடி !

Friday, December 20th, 2019


இலங்கையில் தொலைபேசி பயன்படுத்துவோரை இலக்கு வைத்து மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா மற்றும் வேறு சில நாடுகளைச் சேர்ந்த சிலரே Missed calls செய்வதன் மூலம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

premium callback scam என்ற இந்த நடவடிக்கையின் போது 10235 646 2532, 10212 621 001782 என்ற இலக்கங்களில் இருந்து Missed calls செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் தொலைபேசி பாவனையாளர் குறித்த இலக்கங்களுக்கு மீண்டும் அழைப்பினை ஏற்படுத்தும் போது, பாவனையாளரின் தொலைபேசி கணக்கில் இருந்து பெருந்தொகை பணம் மோசடியாளர்களால் மோசடி செய்யப்படுகின்றது.

இலங்கையில் தொலைபேசியை பயன்படுத்துவோர் பலர் இவ்வாறான Missed calls இற்கு பதிலளித்த நிலையில் குறித்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் சபையிடம் முறையிட்டுள்ளனர்.

இது குறித்து ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் 10235,646,2532 ,10212,621-001782 என்ற இலக்கங்களில் இருந்தே மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே இது தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: