எச்சரிக்கை: தென்கிழக்கு ஆசியாவில் புதுவகை மலேரியா!

புதுவகை மலேரியா நோய் தென்கிழக்கு ஆசியாவில் விரைவாக பரவி வருவதாகவும் இது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் பரவிவரும் இவ்வாறான மலேரியாவினை, மலேரியா எதிர்ப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாதுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கம்போடியாவில் ஆரம்பித்த குறித்த மலேரியா தற்போது தாய்லாந்து, லாவோஸ் மற்றும் தென் வியட்நாமின் பல பகுதிகளிலும் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
அந்த பகுதிகளில் மலேரியாவின் தாக்கமானது விரைந்து காணப்படுவதினால் அது மிகவும் ஆபத்தாக அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்மேலும் குறித்த மலேரியா நோய் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவலாம் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்
ஒவ்வொரு ஆண்டும் 212 மில்லியன் மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இரத்தத்தை உறிஞ்சும் நுளம்புகளால் பரவுகின்ற இந்த மலோரியா வைரஸ் குறிப்பாக குழந்தைகளை அதிக அளவில் தாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|