எச்சரிக்கை…! குடாநாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதி தீவிரம்….!!

Wednesday, January 18th, 2017

நாட்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் மாவட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 16 நாட்களில் யாழ். மாவட்டத்தில் 291 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கனகராஜா நந்தகுமாரன் இதனை தெரிவித்துள்ளார்.

உடுவில், சாவகச்சேரி, மற்றும் யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வரும் நிலையில், மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, டெங்கு நோயின் காரணமாக கடந்த ஆண்டு யாழ். மாவட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

dengue-page-upload-1

Related posts:


பிள்ளைகளுக்குக் அதிக தண்டனை வழங்கும்போது அந்த வன்மம் மாற்றீட்டுக் கோபமாக மாறும் அபாயநிலை உருவாகின்றக...
மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் - வளிமண்டலவியல் திணை...