எச்சரிக்கை: அதிகரிக்கிறது வெப்பம்!

Monday, April 17th, 2017

இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழக திட்டமிடல் துறையில் கல்விபயிலும் மாணவியான அ. ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் காலநிலை மாற்றமே இதற்கு காரணம் என்று தெரிவித்த அவர் குறிப்பாக காடழிப்பு மற்றும் அதிகரித்த வாகனங்களின் பாவனை, நீர் வீண்விரயோகம் போன்ற காரணிகள் வெயில் அதிகரித்தமைக்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக ஏற்படும் வெப்பநிலை காரணமாக நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடர்களை எதிர்கொள்வதாக யாழ். பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் துறையில் கல்விபயிலும் மாணவியான அனன்ரொய்ஸி தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அதிகரித்துவரும் வெப்பம் காரணமாக, பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ரி. பிரதீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பின்னர் காற்றின் ஆதிக்கம் குறைவடையும் என்றும் இதனால் இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் யாழ். மாவட்டத்தின் வெப்பநிலை 36 செல்சியஸை எட்டும் சாத்தியமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


கண்டி நில அதிர்வு விவகாரம் - சுண்ணாம்பு கற்பாறைகளில் ஏற்பட்ட வெடிப்பினால் அதிர்வு ஏற்பட்டதாக கூற முட...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயார்! பேராயர் கர்தினால் மெல்...
கிளிநொச்சியில் ஒரே பாடசாலையில் 71 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு - அதிக தொலைபேசி பாவனை காரணமாக இருக்க...