எச்சரிக்கை : அடுத்த சில நாட்களில் இலங்கையை தாக்க வரவுள்ளது “சாகர்”
Saturday, December 2nd, 2017அடுத்த சில நாட்களில் வரவுள்ள சாகர் புயலின் தாக்கம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒகி புயலின் கோர தாண்டவத்தின் காரணமாக இலங்கையில் 11 பேரும் தமிழகத்தில் 8 பேரும் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், சாகர் புயலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க இடர்காப்பு மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும் தமிழகத்தை சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என தமிழக மக்களை வானிலை மையம் கேட்டுள்ளது. எனினும் அடுத்து வரும் சில தினங்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Related posts:
வறுமையை ஒழிப்பதே இலக்கு - பொருளாதார அபிவிருத்தி அமைச்சு!
சர்வதேச ரீதியில் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு நடவடிக்கை -விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்...
சட்டமா அதிபர் அலுவலக அதிகாரிகளுக்கு அதிநவீன பயிற்சி நிலையம் உருவாக்கம் - சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்...
|
|