எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வழங்குமாறு நீதி அமைச்சு கோரிக்கை!

Wednesday, June 23rd, 2021

தீக்கிரையான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட நட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட 5 உபகுழுக்களுக்கு கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வழங்க முடியும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

காப்புறுதி, நீதித்துறை, மீனவ, சுற்றாடல் மற்றும் பொருளாதாரம் ஆகிய ஐந்து பிரிவுகளில் இதற்காக உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதன்படி உபகுழுக்களுக்கு உட்பட்ட துறைசார் வல்லுநர்களுக்கு கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல் வழங்க முடியும்.

அதற்கிணங்க 0112 44 54 47 என்ற தொலைநகல் இலக்கத்துக்கு அல்லது reforms@mog.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதிக்கு முன்னர், கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல்களை வழங்கமாறு நீதி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கடற்படையினர் வசமிருந்த மண்டைதீவு சனசமூக நிலையம் ஈ.பி.டி.பியின் முயற்சியால் மீண்டும் பொதுமக்கள் பாவனை...
பாடசாலைகளில் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி பணிகளையும் விரைவாக நிறைவு செய்யுங்கள் – துறைச...
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்...