எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவிற்காக, 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Saturday, June 19th, 2021

அத்துடன் கடற்றொழில் திணைக்களத்தின் இணைப்பதிகாரிகளிடம் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த எண்ணாயிரத்திற்கும் அதிக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பயணக் கட்டுப்பாட்டின் காரணமாக விவசாயிகளின் மரக்கறிகள் மற்றும் பழ அறுவடையை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தேவைக்கேற்ப எதிர்வரும் காலங்களில் மேலதிக நிதியை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: