எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிப்பிக்க நடவடிக்கை – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அறிவிப்பு!

தீப்பற்றலுக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் முதற்கட்ட அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.
முன்பதாக கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்வதோடு அவற்றை மீள உருவாக்குவதற்கு ஏற்படும் செலவுகள் தொடர்பான அறிக்கையைத் தயாரிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த அதிகார சபைக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கமைய இரண்டு முன்னணி பேராசிரியர்களின் தலைமையில் குறித்த மதிப்பீடுகள் இடம்பெற்றது.
இந்தநிலையில் குறித்த மதிப்பீடுகளின் முதற்கட்ட அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நீண்ட காலம் கண்காணிப்புகள் மற்றும் பரிசோதனைகள் என்பன மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|