எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான நட்டஈட்டுக்கு வழங்கப்பட்ட கப்பம் – விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபருக்கு நீதி அமைச்சர் உத்தரவு!
Friday, April 14th, 2023எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு எதிரான நட்டஈட்டை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்காத வகையில் கையூட்டல் வழங்கப்பட்டுள்ளதாக கிடைக்கபெற்ற தகவல் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி லண்டனின் வங்கி கணக்கொன்றிற்கு கப்பலின் காப்புறுதி நிறுவனத்தால் வைப்பலிடப்பட்டுள்ளதாக அமைச்சருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன்படி, அந்த தகவலின் உண்மை தன்மை தொடர்பில் ஆராயும் பொறுப்பை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு தாம் காவல்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இணைவழி கற்றலில் ஈடுபட வசதிகளற்ற மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் புதிய திட்டம் - கல்வி அமைச்சர் பேர...
இந்திய உயர்ஸ்தானிகராக மிலிந்த பொறுப்பேற்றார் – இலங்கை - இந்திய உறவுகளை மேலும் வலிமையாக்க பாடுபடவுள்ள...
இலங்கை - பிரான்ஸ் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பம் - சுற்றுலாத்துறை அம...
|
|