எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் – இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள் – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் தகவல்!

Thursday, December 23rd, 2021

கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் கடலில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவன உடன்பாட்டிற்கு அமைவாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை காப்பீடாக செலுத்த உடன்பட்டுள்ளது.

குறித்த பணம் இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் திருமதி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து இடம்பெற்ற ஜூன் மாதம் 31 ஆம் திகதிமுதல் மாசடைந்த கடல் மற்றும் கடலோர பகுதியை சுத்தம் செய்வதற்காக மாத்திரம் குறித்த பணம் செலவிடப்படவிருப்பதாக. சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் குறிப்பிட்டார்.

3.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக கோரிய போதிலும் 2.5 மில்லியன் டொலர்கள் மாத்திரமே இழப்பீடாக வழங்குவதற்கு கப்பல் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

மீதமுள்ள பணத்தை பெறுவதற்கு ஆவணங்கள் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் கூறியுள்ளார். இதற்கு முன் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடாக பெறப்பட்டது.

இந்த கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட கடல்சார் சூழல் மாசுப்பாட்டை கட்டுப்படுத்தும் செலவுகள் மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட நேரடி மற்றும் மறைமுக சேதங்களுக்கு மீன்பிடி திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக கப்பல் நிறுவனம் குறித்த தொகையை வழங்கியுள்ளது. நவம்பர் 1 ஆம் திகதிமுதல் 30 ஆம் திகதி வரையில் இதுதொடர்பில் ஏற்பட்ட செலவீனங்களுக்கு மூன்றாவது காப்பீட்டு உரிமையை கோருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: