எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து : பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நாளைமுதல் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் – பிரதமர் நடவடிக்கை!

Sunday, June 13th, 2021

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவருக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை திங்கட்கிழமைமுதல் வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணதுறைமுதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னர் பிரதமர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதன்போதே தொழில்வாய்ப்பை இழந்துள்ள கடற்றொழிலாளர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பிரதமர் அறிவித்திருந்தார்..

அதேநேரம் கப்பல் விபத்துக்குள்ளானதால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. இழப்பீட்டை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறும் இதன்போது பிரதமர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: