எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீடு வழக்கை விவாதிக்க குழு – அனுமதி வழங்கியது அமைச்சரவை!

Tuesday, June 6th, 2023

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெற சிங்கப்பூரில் ஒதுக்கப்பட்ட இழப்பீட்டு வழக்கை தீர்ப்பது குறித்து ஆலோசிக்க சிறப்பு குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் குழுவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குழு சட்டமா அதிபர் தலைமையில் இயங்குகிறது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள், நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அவுஸ்திரேலியாவின் சட்ட ஆலோசகர் ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


இன்றுமுதல் விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும் - சர்வதேச நாணய நிதியம் வலிய...
பெப்ரவரியில் மின்கட்டணத்தை குறைக்க உத்தேசம் - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள ...