எக்ஸாம் ஸ்ரீலங்கா என்ற பெயரிலான தொலைபேசி செயலி அறிமுகம் – கல்வி அமைச்சு தகவல்!

அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் கொள்கைக்கு அமைய எக்ஸாம் ஸ்ரீலங்கா என்ற பெயரிலான தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..
இந்த செயலியை பயன்படுத்தி வீட்டில் இருந்தவாறே கைத்தொலைபேசி மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் சான்றிதழ்களை உறுதிப்படுத்துதல் பெறுபேறுகளை உறுதிப்படுத்தல் உட்பட பல்வேறு சேவைகளையும் இந்த செயலியின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய கலந்துரையாடல்!
குடிநீர் பிரச்சினை தொடர்பில் வேலணை பிரதேச சபை அதிரடி முடிவு – உடன் அமுலாக்க தவிசாளர் உத்தரவு!
உடனடியாக தமிழிலும் மொழிப்பெயர்ப்பு செய்ய நடவடிக்கை – அரசாங்கம்!
|
|