எக்நெலிகொட தொடர்பான மர்மம் கண்டறியப்பட்டுள்ளது!

Tuesday, September 13th, 2016

காணாமல் போய் நான்கு வருடங்களுக்கு மேலாகியுள்ள பிரகீத் எக்நெலிகொட காணாமல் போக செய்யப்பட்டமைக்கான மர்மத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது கண்டறிந்துள்ளனர்.

எக்நெலிகொட பணியாற்றிய ராஜகிரிய அலுவலகத்தில் இருந்து அவர் வெளியேறிய போது, அவரை அங்கிருந்து கிரித்தலே முகாமுக்கும் கடத்திச் சென்றமைக்கான சாட்சியங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரகீத் எக்நெலிகொட கடத்திச் செல்லப்படும் போது, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இணைந்து செயற்பட்டு வந்ததாக கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த 8 பேருக்கு எக்நெலிகொட கடத்தப்பட்ட சம்பவதுடன் தொடர்பிருப்பதாகவும், அவர் கிரித்தலே முகாமுக்கு அழைத்துச் செல்லப்படும் போது உயிருடன் இருந்ததாகவும் சாட்சியாளர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த 8 பேருக்கு இந்த கடத்திலில் தொடர்பில்லை எனக் கூறி, அவர்களின் மனைவிமார் மற்றும் சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

எவ்வித அடிப்படையுமின்றி, அவர்களை தடுத்து வைத்து, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும், அவர்களை விடுதலை செய்து, இழப்பீட்டை வழங்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை உயர்நீதிமன்றம் ஆராய்ந்தது. பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், சிசிர டி ஆப்ரூ, உபாலி அபேரத்ன ஆகிய நீதியரசர்கள் அமர்வு மனுக்களை ஆராய்ந்தது.

இதன் போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி திலீப பீரிஸ்வுடன் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன இதுவரை வெளியிட சாட்சியங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் விபரித்தார்.இந்த இரண்டு மனுக்களும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2

Related posts:

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் சார்ந்த செயற்திட்டம் முன்னெடுப்பு - வடக்கிலும் விவசாயம் சார்ந்த செய...
பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
இன்று இரவுமுதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் - எரிசக்தி அமைச்சு அறிவிப்...