எக்காரணம் கொண்டும் விவசாயிகளின் வருமானம் குறைவதற்கு வழிசமைக்கக் கூடாது – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
Monday, February 7th, 2022சிறுபோகத்துக்குத் தேவையான பசளைகளை, உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு – ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பசளைச் செயலணிக் கூட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் பல்வேறு தொழில்நுட்ப முறைமைகள் பயன்படுத்தப்பட்டு, தேசிய அளவில், பெரிமளவில் சேதனப் பசளை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவற்றின் பயன்பாடுகள் தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன், அதற்காக நிபுணத்துவ உதவிகளை வழங்குமாறு பசளைச் செயலணியின் உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை “சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பில் போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படாமை காரணமாகவே, கடந்த போகத்தின் போது பல விவசாயிகள் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. எனவும் கூட்டிக்காட்டிய ஜனாதிபதி இம்முறை அந்தக் குறைகளைத் தவிர்த்து, விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் ஊடாக விவசாயப் பெருமக்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் “எந்தக் காரணம் கொண்டும் விவசாயிகளின் வருமானம் குறைவதற்கு வழிசமைக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி அது தொடர்பான நம்பிக்கையை விவசாய பெருமக்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
Related posts:
|
|