ஊழியர் வைப்புக்களை சீர்ப்படுத்தாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் – எச்சரிக்கிறது இலங்கை வட பிராந்திய் போக்குவரத்து சபை!

Wednesday, March 28th, 2018

இலங்கைப் போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி வைப்புக்கள் இரு வாரங்களுக்குள் சீர்ப்படுத்தப்பட வேண்டும், அவ்வாறு சீர்ப்படுத்தப்படாதவிட்டால்; பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அவர்கள் அனுப்பிய செய்திக் குறிப்பில் –

இலங்கைப் போக்குவரத்துச் சபை வடமாகாண பிராந்திய சாலைகளில் உள்ள ஊழியர்களின் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி வைப்புக்கள் பல காலமாக சீர்ப்படுத்தப் படாமல் இருப்பதை அறிய முடிகின்றது.

இலங்கையிலுள்ள அனைத்து அரச தனியார் நிறுவன ஊழியர்கள் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி வைப்புக்களிலிருந்து மிகவும் பெறுமதியான சலுகைகளை பெறுகையில் எமது ஊழியர்கள் இச் சலுகை எதுவும் பெறமுடியாது துன்பப்படுகின்றார்கள்

இதற்கு எமது நிர்வாக அலகு சரியில்லையா ? அல்லது அதை சீர் செய்ய முடியாதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு சாரதி சிறிய குற்றம் இழைக்கும் போது அவரை இடைநிறுத்தவும் இடமாற்றம் வழங்கும் சபை ஏன் தொழிலாளர் உரிமையை கொடுக்க மறுக்கின்றது. மேற்படி கொடுப்பனவுகளை சீர் செய்ய எமது பிராந்திய கணக்காளரோ எமது சாலை கணக்காளரோ முன் வர வேண்டும.;

எனவே அக் கணக்குகள் 14 நாட்களுக்குள் சீர் செய்யப்பட வேண்டும் இல்லையேல் ஓர் பரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு முகங் கொடுக்க நேரிடும் இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அனைத்திற்கும் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் அனைவரும் பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும். இதை கருத்தில் எடுத்து எமது தொழிலாளர்களின் கொடுப்பணவுகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் தெழிலாளர்களின் குடும்பங்களும் மேலும் இறந்த குடும்பங்களும் இளைப்பாறியவர்களும் இக் கொடுப்பனவுகளுக்கு அலைந்து திரிவதனால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிததுள்;ள தேசிய ஊழியர் சங்கம  அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படாதுவிட்டால் 14 நாட்களின் பின் எமது தொழிற் சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: