ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்துவ இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கம்!

Tuesday, March 20th, 2018

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்துவ இலக்கமாக நிதியத்திற்கு பங்களிப்பு செய்துள்ள அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்துவதற்கு தொழிற்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக ஊழியர்களின் விபரங்களை உள்ளடக்கிய வகையில் திணைக்களத்தின் கணனி தரவுகள் புதிதாக தயார் செய்யப்பட்டு வருவதுடன் புதிய அங்கத்துவ இலக்கம் இவ்வருடம் ஜுன் மாதம்முதல் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகர் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

பல நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ஊழியர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதி அங்கத்துவ இலக்கங்கள் பல உண்டு. இதனால் நிதியத்தின் பயன்களை பெற்றுக்கொள்ளும் போது பலபிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது.

இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக இந்த ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்துவ இலக்கமாக ஊழியர்களின் தேசிய அடையாளஅட்டை இலக்கம் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து தமது பணத்தை அங்கத்தவர்கள் பெற்றுக்கொள்ளும் பொழுது ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் சரியாக இடம்பெற்றுள்ளதாஎன்பதை பரிசோதிப்பதற்காக தொழிற்திணைக்களம் ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து தகவல்களை பரிமாறிக்கொள்ளவதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தொழில் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: