ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்!

Saturday, January 27th, 2018

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய அங்கத்தவர்களின்  2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகள் 5000 பேருக்குபுலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொருவருக்கும் 12ஆயிரம் ரூபா வீதம் வழங்க ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபை தீர்மானித்துள்ளது.

தற்போது இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு  எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி வரை  ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

விண்ணப்பங்களை www.etfb.lk இணையத்தளத்தின் ஊடாகவும் தரவிறக்கம் செய்ய முடியும். அத்தோடு ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் பிராந்தியஅலுவலகங்களிலும் பெற்றுகொள்ளலாம்.

மேலும் இது குறித்த மேலதிக தகவல்களுக்கு 011-2369685 ,011-2369313 , 011-2368162 என்னும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என்றும்ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் தெரிவித்துள்ளது

Related posts: