ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு புதிய இலக்கம்!

Wednesday, April 18th, 2018

ஜூன் மாதம் முதல் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் உறுப்பினரின் இலக்கமாக பயன்படுத்தப்படவுள்ளதாக தொழில்ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

இதற்காக தற்போது தொழிலாளர் மற்றும் தொழில் வழங்குநர்களின் விபரங்கள் அடங்கிய விபரங்களுடன் திணைக்களத்தின் கணினியில் தரவுகளை புதுப்பிக்கும் பணிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊழியர்கள் பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளமையால் அவர்களுக்கு பல இலக்கங்கள் காணப்படுகின்றன. இதனால் நிதியத்தின் பயன்களை பெற்றுக் கொள்ளும் போது சிக்கலாகஅமைகின்றது. இந்த நெருக்கடியை தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர் இலக்கமாக அவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தத்தீர்மானிக்கப்பட்டுள்ளதென ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: