ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்க் வேண்டும் -அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, November 28th, 2023

ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பதன் மூலம் மாத்திரமே அதனை செயற்படுத்த முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு 20 000 ரூபாய் கொடுப்பனவை பெற்றுத்தருமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த உலகத்தில் உள்ள யதார்த்தத்தை இந்த நாட்டு மக்கள் புரிந்துக்கொள்ளாமல் இருப்பதை ஒரு துரதிஸ்டவசமாகவே நான் கருதுகின்றேன். அது இந்த இனத்தின் துரதிஸ்டவசம்

2022 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு வரி வருமானம் 1751 பில்லியன் ரூபா.அதில் 1265 பில்லியன் ரூபா அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம்.

வரி வருவானத்தில் சுமார் 72 வீதம் அரச ஊழியர்களுக்கான சம்பளத்திற்காகவே செலவிடப்பட்டுள்ளது. 1565 பில்லியன் ரூபா கடன் வட்டி கடன் வாங்கி செலுத்தப்பட்டுள்ளது.

இவை நான் கூறும் கதை அல்ல நாட்டின் கணக்காய்வாளர் கணக்கிட்டு நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கை.

ஆகவே இவர்கள் கோரும் கொடுப்பனவுகளை வழங்க வேண்டுமாயின் நாட்டு மக்கள் மீது பாரிய வரிச்சுமை ஒன்றை செலுத்த வேண்டும்.

தற்போது இருக்கும் நிலையை கருத்தில் கொண்டே 2000 ரூபா கொடுப்பனவை அதிகரித்து ஜனவரி மாதம் முதல் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவற்றை ஜனாதிபதியின் நிதியிலோ அரசியல்வாதிகளின் நிதியிலோ வழங்கவில்லை இவற்றை பொதுமக்கள் செலுத்தும் வரியிலேயே வழங்குகின்றோம்.

இதற்கு மேலும் எவ்வாறு பொதுமக்கள் மீது வரிச்சுமையை செலுத்துவது?” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: