ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமைச்சரின் ஆலோசனைக் குழு ஒப்புதல்!

Friday, February 25th, 2022

பணியில் இருக்கும் போது விபத்துகளில் காயமடைந்தால் அல்லது மரணமடைந்தால் அல்லது மொத்த ஊனம் ஏற்பட்டால் ஊழியர் களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமைச்சரின் ஆலோசனைக் குழு ஒப்புக் கொண்டுள்ளது.

தற்போது 5  இலட்சத்து 50 ஆயிரம் ரூபா  இழப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. வேலைக்காகப் பயணிக்கும் போது ஏற்படும் சம்பவங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு இழப்பீட்டு விதிமுறைகளின் விளக்கத்தையும் இது விரிவுபடுத்தவுள்ளது.

Related posts: