ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது – பல்கலைக்கழக தொழிற்சங்க தலைவர்!

Thursday, March 15th, 2018

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம்) 16 வது நாளாகவும் இடம்பெறுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

தொழிற்சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக, தற்போது பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று(14) அறிவித்திருந்தது.

குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் பணிக்கு திரும்ப போவதில்லை என்று பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எட்வட் மல்வத்தகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: