ஊழல் விசாரணை – பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அதிகாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்!

Tuesday, August 8th, 2023

இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் குறிப்பிட்ட காலப்பகுதியில் எதிர்கொண்ட பாரிய நஷ்டத்திற்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த அதிகாரியொருவர் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு  வெளிநாட்டிற்கு சென்றுள்ளமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

வர்த்தகம் மற்றும் விநியோகத்திற்கான முன்னாள் பிரதிபொது முகாமையாளரே விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ளார்.

சிரேஸ்ட அதிகாரியொருவர் விசாரணைகள் இடம்பெறும்வேளை எவ்வாறு நாட்டிலிருந்து செல்வதற்கான அனுமதியை பெற்றார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அவ்வாறான முக்கியமான பதவியில் உள்ள நபர் ஒருவர் விசாரணைகள் இடம்பெறும்வேளை பாதுகாப்பு அனுமதியை பெறாமல் இராஜினாமா செய்திருக்க முடியாது என தெரிவிக்கப்படுவதுடன் இந்த ஊழலில் ஒருவர் மாத்திரம் ஈடுபட்டிருக்க முடியாது ஊழலில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் காண்பதற்கு முழுமையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுககப்பட்டு வருகின்றது.

இதேநேரம் குறிப்பிட்ட அதிகாரி எவ்வாறு தனது மனைவி மூலம் இராஜினாமா கடிதத்தை வழங்க முடியும் அவர் மீண்டும் திருப்பி அழைக்கப்படுவாரா என்ற கேள்விகளுக்கு அமைச்சர் காஞ்சன விஜயசேகர இது குறித்து பதிலளிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: