ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிதாக அதிகாரிகள் இணைப்பு!
Tuesday, April 9th, 2019இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிதாக 200 அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அதிகாரிகளை உள்ளீர்ப்பதற்காக நடாத்தப்பட்ட தகுதிகாண் பரீட்சையில் 402 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ய தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தகுதிகாண் பரீட்சையில் தெரிவாகியுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை ciaboc.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகுதிகாண் பரீட்சையில் சித்திபெற்றவர்களிலிருந்து, தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சையை விரைவில் நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ய இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் பேரவலம்!
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு: நோயாளர்கள் பெரும் அவதி!
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்...
|
|