ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் 5 வருடங்களில் 392 வழக்குகள் பதிவு!

Tuesday, May 16th, 2017

ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு கடந்த 5 வருடங்களில் நீதிமன்றத்தில் 392 வழக்குகளைத் தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நெஷனல் நிறுவனம் கோரியமைக்கு பதிலளிக்கும் வகையில் லஞ்ச ஆணைக்குழு இந்தத் தகவல்களை வழங்கியுள்ளது

இது தொடர்பில் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு,

நீதிவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் 2012 – 2016 ஆம் ஆண்டு வரை இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த 5 வருடங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றவாளிகள் 106 பேர் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் 2 ஆண்டுகளில் லஞ்ச ஆணைக்குழு இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. ஊழல் எதிர்ப்பு நடை பயணத்தை ஒழுங்கு செய்து ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாட்டின் பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

மேலும் ஊழலை ஒழிக்கும் வகையிலான ஸ்ரிக்கர்கள் நாடு முழுவதும் ஒட்டப்பட உள்ளன. என ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts: